கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்தரன், செந்தில் வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை தரக்குறைவாக சித்தரித்த விவகாரத்தில் கைதான கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் ஆகியோரை கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் வாசன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் திரு.பி.என் பிரகாஷ், திரு.வி சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு சுரேந்திரன், செந்தில் வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.