Categories
தேசிய செய்திகள்

“கருப்பா இருக்காரு….. எனக்கு இந்த மாப்பிளை வேண்டாம்”….. கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்….!!!!

மணமகனின் நிறம் கருப்பாக இருந்த காரணத்தினால் கடைசி நேரத்தில் மணமகள் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் எட்டாவாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ரவி யாதவ் மற்றும் நீதா யாதவ் ஆகியோருக்கு திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தின் போது மணமகள் மாலையை அணிவித்துவிட்டு மாப்பிள்ளை மிகவும் கருப்பாக இருப்பதாக கூறினார். பின்னர் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றிக்கொண்டு நெருப்பை சுற்றி வளம் வர தொடங்கிய போது பெண் கோபமடைந்தார். சம்பிரதாயப்பட்டை ஏழுமுறை அக்னியை சுற்றி வளம் பெற வேண்டும். ஆனால் இரண்டு முறை சுற்றி வந்த பிறகு திருமணத்திலிருந்து விலகுவதாக மணப்பெண் கூறினார்.

வேறு ஒருவரின் புகைப்படத்தை காட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டு தற்போது தன்னைவிட வயதில் மூத்தவராகவும், மிகவும் கருப்பாக இருக்கும் இவரை மணமகனாக கொண்டு வந்து நிறுத்தி உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெற்றோர்கள் மணமகளை சமாதானப்படுத்த முயன்ற போதும் பயன் அளிக்கவில்லை. சுமார் ஆறு மணி நேரம் மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். இறுதியாக மணமகன் திருமணத்தை விட்டு வெளியேறினார்.

இதற்கு இடையில் மணமகளுக்கு பரிசாக கொடுத்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை திரும்பிக் கொடுக்கவில்லை என மணமகனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக மணமகன் ரவி யாதவ் தெரிவித்ததாவது “இந்த சம்பவம் தனது முழு வாழ்க்கையையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் தன்னை பலமுறை சந்தித்துள்ளனர். திடீரென்று திருமணத்தில் இருந்து ஏன் அவர் பின்வாங்கினார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |