Categories
சினிமா தமிழ் சினிமா

கருப்பா இருக்குறேன்னு விமர்சிக்கிறாங்க… கஷ்டமா இருக்கு… பிரியாமணி பேட்டி…!!!

சினிமா துறையில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து நடிகை பிரியாமணி பேட்டியளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது திருமணத்திற்கு பிறகும் பிரியாமணி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த பிரியாமணி ‘சினிமா துறை போட்டிகள் நிறைந்தது . நான் கடினமாக உழைத்து மெதுவாக முன்னேறினேன் . நடிப்புக்கு திருமணம் தடையில்லை. என் கணவர் எனக்கு உதவியாக இருப்பதால் தொடர்ந்து நடிக்கிறேன். குறிப்பாக திருமணத்திற்கு பின்பு தான் அதிக பட வாய்ப்புகள் கிடைக்கிறது.

 

Location Diaries: When Priyamani's dad was star-struck by Mohanlal- Cinema  express

காஜல் அகர்வால், சமந்தா போன்ற திருமணமான நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதேபோல் சீனியர் நடிகை நயன்தாராவும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். சினிமாவில் திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர் என்று வித்தியாசம் இல்லை. திறமை இருந்தால் வெல்லலாம். எனக்கு வயதாகிவிட்டது,  குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் என்று சிலர் விமர்சிக்கின்றனர். அது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. யாரையும் தரம் தாழ்த்தி பேச வேண்டாம். கருப்பும் அழகுதான்’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |