Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கருப்பு உளுந்து கஞ்சி… செய்வது எப்படி?

கருப்பு உளுந்து கஞ்சி செய்ய தேவையான பொருள்கள்:
கருப்பு உளுந்து                – 1 கப்
தேங்காய் துருவல்          – 4 ஸ்பூன்
தூள் செய்த கருப்பட்டி – அரை கப்
சுக்கு தூள்                            – 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள்                  – 1 தேக்கரண்டி
தண்ணீர்                               – 5 கப்செய்முறை :

வாணலியை அடுப்பில் வைத்து அதில் கருப்பு உளுந்தை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து சிறிது ஆறவைத்து கொள்ளவும் அதனை மிக்சிஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து  கொள்ளவும்.

அரைத்த உளுந்து  மாவில் 1 கப் நீர், சிறிது உப்பு கலந்து இட்லி மாவு பதத்தில்  கரைத்து கொள்ளவும். மிக்சிஜாரில் கருப்பட்டியை சேர்த்து  நன்கு அரைத்து கொள்ளவும்.

அடுப்பில்  பாத்திரத்தை வைத்து நீர் ஊற்றி, கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள உளுந்து மாவை கலந்து, நன்கு வேகும் வரை கிளறவும் .

பின்பு கொதிக்க வைத்த மாவு வெந்து வரும்போது, அரைத்து வைத்துள்ள கருப்பட்டி, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு காய்ச்சி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தண்ணிரை ஊற்றி  கொதிக்க வைத்து கொள்ளவும். காய்ச்சிகின்ற கஞ்சியானது கொதிக்க வைத்துள்ள நீரை அவ்வப்போது ஊற்றி கிண்டி விட்டு நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறினால் சுவையான கருப்பு உளுந்து கஞ்சி ரெடி.

Categories

Tech |