புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது.
பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்த கருப்பு எள் குறித்து விளக்குகிறது.
பலகாரம்:
எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, வடை, எள்ளுருண்டை இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம். இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி
அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று.இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்களை தாய்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட்டது.
புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது:
அதில் கருப்பு எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் செசாமின் என்னும் பொருள் தான். செசாமின் என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த செசாமின் வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.
பெண்கள் சாப்பிட்டால்
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம். எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும். உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட்டால் நல்லது.