தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் கருப்பு கருணா. இவருக்கு திடீரென மாரடைபு ஏற்பட்டதன் காரணமாக, இன்று உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன. இறுதி நிகழ்ச்சி நாளைக்காலை 10 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலையில் நித்தியானந்தா சீடர்களின் மலை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை மக்கள் ஆதரவோடு தடுத்த போராட்டத்திலும், முற்போக்குக் கருத்துகளைப பரப்புரை செய்வதிலும் முன்னணியில் நின்று பணியாற்றியவர் கருப்பு கருணா என்பது குறிப்பிடத்தக்கது.