Categories
மாநில செய்திகள்

கருப்பு- சிவப்பு மாஸ்க், கருப்பு – சிவப்பு சைக்கிள்… அஜித், விஜய் ரசிகர்களுக்கு கொடுக்கும் சிக்னலா?…!!!

அஜித் மற்றும் விஜய் இருவரும் வாக்களிக்க வந்த விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்ய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் அணிந்திருந்த மாஸ்க்கும், சைக்கிளும் பெரும் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமை ஆற்றி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் அவரவருக்குரிய வாக்குச்சாவடிகளில் சென்று காலை 9. 30 மணியளவில் வாக்களித்தனர். அதில் குறிப்பாக, நடிகர் விஜய் தன்னுடைய வீட்டிலிருந்து சைக்களில் சென்று நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களித்திருந்தார். பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பதை விமர்சிக்கும் விதமாகவே விஜய் இவ்வாறு செய்திருப்பதாக கூறப்பட்டு வந்தது.

தற்போது அதே போல, அஜித் வாக்களிக்க வந்தபோது அணிந்து வந்த மாஸ்க் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அஜித் வாக்களிக்க வரும்போது சிவப்பு பட்டை கொண்ட, கருப்பு நிற மாஸ்க் அணிந்திருந்தார். அதே போல நடிகர் விஜய்யும் கருப்பு நிற மாஸ்க் அணிந்திருந்தார். அதோடு விஜய் வந்த சைக்கிளின் நிறம் கருப்பு – சிவப்பு. இதை கவனித்த ரசிகர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் கருப்பு- சிவப்பு மாஸ்க் மற்றும் கருப்பு சிவப்பு சைக்கிள் ஆகியவற்றின் மூலம் தங்களுடைய ரசிகர்களுக்கு யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதற்கான சிக்னலைத் தான் இப்படி காட்டியிருக்கிறார்களா என்ற கேள்வி அவர்களுடைய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Categories

Tech |