தமிழில் “கற்க கசடற” படத்தின் வாயிலாக திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் “தாம் தூம்” படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, மங்காத்த, காஞ்சனா, அரண்மனை’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.
அதன்பின் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு குதித்தார். அவ்வாறு இந்தியில் ராய்லட்சுமி முதன் முறையாக நடித்த “ஜூலி 2” படம் தோல்வியை சந்தித்து இருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா படம் வெளியாகியது. அவ்வப்போது பல்வேறு போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராய்லட்சுமி, தற்போது கருப்பு உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இப்புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வருகிறது.