Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கருப்பு நிறமாக இருக்கும் தண்ணீர்…. செத்து மிதக்கும் மீன்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டி.வடுகப்பட்டி பிரிவில் கடைகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் குறைந்த அளவு தண்ணீர் இருக்கிறது. மேலும் தண்ணீர் கருப்பு நிறமாக இருப்பதால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த குளத்தில் நச்சு கழிவு கலக்கிறது. அதிகாரிகள் அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |