Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கூறி…. நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ராம் நகரில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கிகளில் கடன் உதவி பெற்று தரும் பங்குதாரராக இருக்கிறார். இவர் மூலம் கடன் பெற்ற திருவேங்கடசாமி என்பவர் தனக்கு கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் தெரியும். அவர்கள் கருப்பு பணம் வைத்துள்ளனர். அதனை மாற்றுவதற்காக 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 2 லட்ச ரூபாய் கிடைக்கும் என பிரவீன் குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி பிரவீன் குமாரும், திருவேங்கடசாமியும் இணைந்து அம்பராம்பாளையம் பகுதியில் 1 லட்ச ரூபாயுடன் காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தங்களிடம் இருக்கும் 2 லட்ச ரூபாய் கருப்பு பணத்தை வாங்கிக் கொண்டு 1 லட்ச ரூபாயை தருமாறு கேட்டனர்.

அதன்படி பிரவீன் குமார் 1 லட்ச ரூபாயை கொடுத்து 2 லட்ச ரூபாய் கருப்பு பணத்தை வாங்கிக் கொண்டார். உடனடியாக இரண்டு மர்ம நபர்களும் அங்கிருந்து சென்றனர். பின்னர் அவர்கள் கொடுத்த பையை பிரித்து பார்த்தபோது 4 கட்டுகளின் மேற்புறமும் கீழ்புறமும் 500 ரூபாய் நோட்டுகளும், நடுவே வெள்ளை நிற காகிதங்களும் இருந்ததை பார்த்து பிரவீன் குமாரும், திருவேங்கடசாமியும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பிரவீன்குமார் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |