Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த…. மாநில அளவில் பணி குழு…. தமிழக அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்த நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில அளவில் பணி குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பே உருமாறி கருப்பு பூஞ்சையாக மாறுகிறதா? என கண்டறிய வேண்டியுள்ளது. எனவே அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூக்கடைப்பு, முகத்தில் வழி இருந்தால், காது மூக்கு தொண்டை சிகிச்சை அணுகலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |