நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்த நோயால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில அளவில் பணி குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு 30,000 மருந்துகளை வழங்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.