Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை…. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை நோய் வருகிறது.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சுத்தமான நீரைக் கொண்டு முகம் கழுவ வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்களை முறையாக பராமரிக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். கண் எரிச்சல், வலி, பல் வலி மற்றும் தலை வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |