தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. மக்கள் இதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் புதிய வகை நோயான கண்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோய்தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இது ஸ்டீராய்டு எனப்படும் மருந்து அதிகளவில் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது என கூறப்படுகின்றது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
இந்த கருப்பு பூஞ்சை தொற்று நோயினால் தமிழகத்தில் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும். இதனால் உயிரிழப்புகள் இல்லை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு அறிவுறுத்தல் பேரில் மாநிலங்களுக்கு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.