Categories
மாநில செய்திகள்

கரும்பு கொள்முதல் : ரூ. 72 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்ய ரூபாய் 72 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை..  எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1000 பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை  9ஆம் தேதி தொடங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்ய ரூபாய் 72 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. மேலும் பொங்கல் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.

Categories

Tech |