Categories
மாநில செய்திகள்

கரும்பு டன்னுக்கு விலை ரூ. 50 உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பால்…. விவசாயிகள் ஏமாற்றம்…!!!

கொள்முதல் செய்யப்படும் கரும்பு விலை டன்னுக்கு ரூபாய் 50 உயர்த்தி ரூ.2900 ஆக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள அறிவிப்பால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் சுந்தர விமலநாதன் கூறுகையில், இன்று கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த நியாயமான மற்றும்  ஆதாயமான விலை நியாயமற்றதாக உள்ளது. கடந்த வருடம் ஆதாயமான விலை டன்னுக்கு ரூ.28500 என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது இதைவிட 50 மட்டுமே உயர்த்தி ரூ.2900 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உரங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு காரணமாக விவசாய தொழிலாளர்களின் செலவுகள் அதிகரித்து உள்ளது. இதையெல்லாம் மத்திய அரசு கவனத்தில் கொள்ளாமல் விலையை அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |