கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் பகுதியில் பட்டுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிவேல் என்ற மகன் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு தெருவில் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை ஜோதிவேல் கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் ஜோதிவேலை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஜோதிவேலுக்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.