சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பெண்களை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு விதமான சட்டங்களை இயற்றி வருகிறது. இருப்பினும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தினசரி ஏதாவது ஒரு இடத்தில் அரங்கேரி கொண்டு தான் இருக்கிறது. இந்த பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பதற்காக அரசு போக்சோ சட்டங்களை இயற்றியுள்ளது. இருப்பினும் சில காட்டுமிராண்டிகள் குழந்தைகள் என்று கூட பாராமல் அவர்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகிறார்கள்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ஆடு மேய்க்கும் தொழிலாளியான நாகப்பன் (55) என்பவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பின் சிறுமியின் கை, கால்களை கட்டி கரும்பு தோட்டத்திற்குள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன் பிறகு சிறுமி தன்னுடைய பெற்றோர் வெளியூரில் இருந்து திரும்பி வந்த பிறகு நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குபதிவு செய்த காவல் துறையினர் நாகப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.