தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், கரும்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படி பொங்கலுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகனிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். பதிலளித்த அவர், கரும்பு மார்க்கெட்டில் இருக்கிறது. வயலில் இருக்கிறது. எங்கும் இருக்கிறது என்று கிண்டலாக பதில் சொல்லிவிட்டுச் சென்றது பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.