Categories
ஈரோடு கரூர் திருப்பூர் நாமக்கல் மாவட்ட செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு முக்கிய செய்தி…. “இலவச தகவல் தொடர்பு மைய எண் அறிமுகம்”… ஈ.ஐ.டி அறிவிப்பு….!!!!!!

ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட விவசாயிகள் இலவச தகவல் தொடர்பு கொள்ள மைய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கரும்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தி செய்து சாகுபடி செய்து வருகின்றார்கள். கரும்பு சாகுபடிக்கு குறைந்த நீர் நிர்வாகத்தை பயன்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல மானியங்களை வழங்கி வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்புகளை விவசாயிகள் ஈ.ஐ.டி புகளூர் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஈ.ஐ.டி புகளூர் சர்க்கரை ஆலையின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்காக தமிழகத்தில் பல்வேறு நவீன சாகுபடி வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதையடுத்து திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு அலுவலகங்கள் மூலமாக விவசாயிகளுக்கு நவீன கரும்பு சாகுபடி வேளாண்மை அறுவடை தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் கரும்பு பதிவு, கரும்பு சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளுதல் மற்றும் கரும்பு விவசாயம் சம்பந்தப்பட்ட சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கருத்துகளை ஆலோசிப்பதற்காக இலவச தகவல் தொடர்பு மைய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 18001034330 இதற்கு தொடர்பு கொண்டு விவசாயிகள் கரும்பு நடவு செய்தல், சாகுபடி, பயிர் மேலாண்மை, உர மேலாண்மை, அறுவடை உள்ளிட்ட அனைத்து கரும்பு சாகுபடிக்கு தேவையான தகவல்களை பெற்று முன்னேற வேண்டும் என புகளூர் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |