நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்த நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் வார்டு ஒன்றும், 120 அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் கலந்து கொண்டனர்.