சட்ட விரோதமாக வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்திய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டாலம் காட்டுக்கொட்டாய் பகுதியில் இருக்கும் வீட்டில் ஸ்கேன் மையம் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ஸ்கேன் மையத்தில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் ஒரு கர்ப்பிணியை மலைகோட்டாலத்தில் இருக்கும் ஸ்கேன் மையத்திற்கு அனுப்பி வைத்து கண்காணித்துள்ளனர். பின்னர் அதிரடியாக அதிகாரிகள் ஸ்கேன் மையத்திற்குள் நுழைந்தனர்.
அப்போது கருவில் இருப்பது ஆணா? பெண்ணா என்பதை கண்டறிந்து கொண்டிருந்த வடிவேல்(45) என்பவரை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இவர்கள் மாத்திரைகளை கொடுத்து கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் வடிவேலை கைது செய்து ஸ்கேன் மையத்திற்கு சீல் வைத்தனர். மேலும் ஸ்கேன் கருவி, மடிக்கணினி, 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.