ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். அதாவது அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
அதன்பிறகு மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ஊராட்சி அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். மேலும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள், அலுவலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.