கருவேப்பிலை துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரைக்கப்
வெள்ளை பூண்டு – சிறிதளவு
இஞ்சி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
உளுந்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 5
கருவேப்பிலை – அரை கிண்ணம்
புளி – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கருவேப்பிலையை பச்சை வாடை போகும் அளவுக்கு வதக்கி எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் உற்றி சூடானதும் அதில் தேங்காய், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு போட்டு நன்கு வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.
மிக்சி ஜாரை எடுத்து அதில் வதக்கிய அனைத்தையும் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,சிறிது கருவேப்பிலை, அரைத்த கலவையையும் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சத்தான, சுவை மிகுந்த கருவேப்பிலை துவையல் ரெடி.