தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன திவ்யா தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய கணவர் அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடித்துவரும் நடிகையுடன் நெருக்கமாக இருப்பதால் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னை சந்திப்பதில்லை.
என்னை பிளாக் செய்துவிட்டார் அத்துடன் செல்லம்மா சீரியல் நடிகையும் தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் திவ்யாவின் கணவர் அர்ணவ், திவ்யா கருவை கலைப்பதற்காகவே நாடகம் ஆடுகிறார் என்று பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.