17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் தாய் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொருக்குப்பேட்டை பகுதியில் வசிக்கும் துரைராஜ் உட்பட 3 பேர் சிறுமியை தனித்தனியாக கற்பழித்தது தெரியவந்துள்ளது. இதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்காக அவரது தாயார் துரைராஜிடமிருந்து 5 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால் கருவை கலைக்க முடியாததால் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துரைராஜ், சிறுமியின் தாயார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியை கற்பழித்த மற்ற இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதோடு காவல்துறையினர் சிறுமியையும், குழந்தையையும் மீட்டு தண்டையார்பேட்டையில் இருக்கும் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.