கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா(23) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நதியா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு கருவை கலைக்குமாறு கூறியதால் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்த நதியா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்ற இளம் பெண்ணின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.