நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் சமீப காலமாக மூடநம்பிக்கை இந்தியாவில் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் பீகார் மாநிலம் பாதாம் கிராமத்தில் கர்ப்பிணியின் கரு கலையாமல் இருக்க 8 வயது சிறுமி நரபலி என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மந்திரவாதி பர்வேஸ் ஆலம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.