கரூரில் வாகனம் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ் என்பவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்ய கனகராஜ் முற்பட்ட போது, அந்த வேன் நிற்காமல் அவரை மோதிவிட்டு, பறந்து சென்றுவிட்டது.. இதில் பலத்த காயமடைந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.. இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்..
இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர்.. மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் மோதிய வாகனம் பதிவாகி உள்ளதா? என்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. கரூரில் வாகனம் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..