கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் சேர்ந்த சரவணன்(வயது 44) என்ற தனியார் பள்ளி ஆசிரியர் தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் இரண்டு பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் சரவணன் கூறியிருந்ததாவது ஜெயந்தி (மனைவி ) ஐ லவ் யூ மற்றும் மகன்கள் பிரவீன்குமார், ரக்ஷிதன் ஐ லவ் யூ எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அம்மா ,அக்கா, அண்ணன் ,தம்பி அனைவரையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன் எனக் கூறியிருந்தார். மேலும் மாணவர்கள் அனைவரும் தன்னை தவறாக நினைப்பதாகவும் மாணவர்கள் முன் தனக்கு வாழ விருப்பமில்லை எனவும் அவர் அதில் எழுதியிருந்தார்.
மேலும் நான் மாணவர்கள் அனைவரையும் கோபத்தில் திட்டி இருக்கிறேன்.நான் எந்த தவறும் செய்யவில்லை. மாணவர்கள் ஏன் என்னை தவறாக நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. மிஸ் யூ ஆல் நன்றாக படியுங்கள் என உருக்கமாக எழுதி இருந்தார். மேலும் சரவணன் பணியாற்றிய அதே பள்ளியில்தான் ஏற்கனவே ஒரு பிளஸ்டூ மாணவி கடந்த நவம்பர் 19ஆம் தேதி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த தற்கொலைக்கும் சரவணனுக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா? எனும் கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் தனியார் பள்ளி பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான ஆசிரியர் மீதும் சக்கரவர்த்தியை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து அவரிடமிருந்து பல தகவல்களை திரட்டி வருகின்றனர். இதனிடையே மிதுன் சக்ரவர்த்தியை கோட்டிலிருந்து அழைத்து வரும் பொழுது இளைஞர் ஒருவர் அவர் மீது ஆவேசமாக கத்தி கூச்சலிட்டு உள்ளார்.