Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கரூரில் தொடங்கிய புத்தகத் திருவிழா”…. 11 நாட்கள் நடைபெற ஏற்பாடு….!!!!!!

கரூரில் 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது.

கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூரில் இருக்கும் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் சென்ற 19 தேதி புத்தகத் திருவிழா தொடங்கியுள்ளது. இப்புத்தகத் திருவிழாவிற்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்று திறந்து வைத்தார். இப்ப புத்தகத் திருவிழாவானது வருகின்ற 29ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற இருக்கின்றது.

இதில் நூறு அரங்கில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற இருக்கின்றது. இதில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும் 6 மணி முதல் 8 மணி வரை நற்சிந்தனைகள் நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பஸ் வசதியும் செய்யப்பட்டு இருக்கின்றது.

Categories

Tech |