கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக தமிழக அரசு 10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “தற்போது வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரியில் புதியதாக அரசு தோட்டக்கலை கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.
வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, 2021 – 2022ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய மூன்று இடங்களில் புதிய அரசு வேளாண் கல்லூரிகள் துவங்குவதற்கு மாநில அரசு தலா 10 கோடி வீதம் மொத்தம் 30 கோடி நிதியை ஒதுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.