கரூரில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்து, கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.. ஏற்கனவே கோவை மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதால் தமிழகமே பரப்பானது..
நேற்று முன்தினம் உயிரிழந்த 12 ஆம் வகுப்பு மாணவியின் தாயார் மற்றும் உறவினர்கள் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளனர்.. ஆனால் அங்கு இருந்த காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மது போதையில் தாயாரையும், உறவினரையும் அவதூறாக பேசி தாக்கியது மட்டுமில்லாமல் விடிய காலை வரை அமர வைத்து விட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..
இதுகுறித்த தகவல் வெளியாகி பலரும் அந்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், எஸ்பி சுந்தரவடிவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு காவல் ஆய்வாளர் கண்ணதாசனை மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில், காவல் ஆய்வாளர் கண்ணதாசனை டிஐஜி சஸ்பெண்ட் செய்து தற்போது உத்தரவிட்டுள்ளார்..
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மட்டும் நிர்வாகத்தினரிடம் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..