Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் 800 வருட பழமையான கோவில்…. பூமிக்கடியில் கேட்ட சத்தம்…. பாதாள அறை கண்டுபிடிப்பு…!!

கரூரில் 800 வருட பழமையான கோவிலில் பாதாள அறை மற்றும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள மலைக்குன்றின் மேல் மரகதவல்லி அம்பிகை உடனுறை மகாபலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலை கோவில் 800 வருடங்கள் பழமையானது. கடந்த சில வருடங்களாக இந்த கோயில் பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் கோவிலை சீரமைப்பதற்காக பக்தர்கள் அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சீரமைப்பு பணியின்போது ஒரு இடத்தில் தோண்டியபோது வினோதமான சத்தம் கேட்டுள்ளது. அதற்குள் சுரங்க பாதையும், பாதாள அறையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அறநிலை துறை அதிகாரிகள், உதவி ஆணையர் சூரியநாராயணன், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நிர்வாக அலுவலர் சங்கரன், அரவக்குறிச்சி ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளனர். மேலும் அந்த அறையினுள் உலோகத்தினாலான குத்துவிளக்கு, சரவிளக்கு, குடம் சந்தன கிண்ணங்கள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன. இந்த பொருட்கள் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் பாதுகாப்பில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |