Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் எம்.பி.யை காணவில்லை…. போஸ்டரால் பரபரப்பு….!!!!

கருப்பூரில் எம்பி ஜோதிமணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் மோதல், ஆட்சியருடன் மோதல் என பரபரப்பாக பேசப்பட்டார்.இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் ஜோதிமணி பயணித்தார். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அவரின் நடைபயணம் தொடர்கின்றது. என் நிலையில் கரூர் எம்பி ஜோதி மணியை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் கரூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.மேலும் வாக்களித்து வெற்றி பெற செய்த உள்ளூர் மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமலும் கண்டுகொள்ளாமலும் இருப்பதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |