மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தையல், கணினி, மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளது.
இந்த பயிற்சியின் காலம் ஒரு வருடம் ஆகும் . இந்நிலையில் இந்த தொழில் பயிற்சியில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே தொழில் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் https:// skilltraining.tn.gov.in/DET என்ற இணையதளத்திலோ அல்லது (04324-222111, 75388 77430 என்ற தொலைபேசி எண்ணின் மூலமோ விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு பேருந்து கட்டணம் , மிதிவண்டி, மடிக்கணினி, பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.