கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நீலி மீட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் வெங்கமேடு சாலையில் அரசு மதுபான பார் நடத்திவந்துள்ளார். இவருக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அதிகாலை மூன்றாவது மாடியிலிருந்து இருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இது தற்கொலையா ? அல்லது தவறி விழுந்தாரா ? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .