கடல் பகுதியில் ஒரே நேரத்தில் பல லட்சம் மீன்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பெனார் கடல் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரை ஒதுங்கிய சில மணி நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதற்குக் காரணம் சீல் மற்றும் டால்பின்கள் போன்ற பெரிய கடல் வாழ் உயிரினங்களுக்கு பயந்து அவற்றிடமிருந்து தப்பிக்க இந்த மீன்கள் கரை ஒதுங்கி இருக்கலாம்.
மீண்டும் அவற்றால் கடலுக்குள் திரும்ப முடியாமல் துடிதுடித்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடல் பகுதியில் பல கிலோ மீட்டர் அளவிற்கு மீன்கள் இறந்து கிடப்பதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.