வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலின் வெளிச் சுற்றுப் பகுதி கரையைத் தொட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலின் வெளிச் சுற்றுப் பகுதி கரையைத் தொட்டுள்ளது. அதனால் கடலூர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.
மேலும் வெறி சுற்றுப்பகுதி தரையைத் தொட்ட நிலையில் இன்னும் ஆறு மணி நேரத்தில் கோயிலின் மையப்பகுதியில் கரையைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னையில் புயல் காரணமாக 50 கிமீ வேகத்தில் காற்று வீசிக் கொண்டு இருப்பதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.