வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேற்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை 5 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது. இதனால் இன்று தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும். மேலும் சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.