கரை ஒதுங்கிய மர்ம பொருள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள விழுந்தமாவடி வடக்கு மீனவ கிராம கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மர்ம பொருள் கரையில் ஒதுங்கிக் கிடப்பதாக கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடலோர காவல்படையினர் மீனவ கிராம கடற்கரைக்கு சென்று அந்த மர்ம பொருளை கைப்பற்றினர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மர்ம பொருள் துறைமுகத்தில் கப்பல் செல்லும் போது ஆழமான பகுதியை அடையாளம் காட்டுவதற்காக கடலில் மிதக்க விடப்படும் போயா எனப்படும் மிதவை பொருள் என்பது தெரியவந்துள்ளது. அந்தக் கருவியில் பொருத்தப்பட்டிருந்த பெரிய அளவிலான சிலிண்டர் வெள்ளப்பள்ளம் கடற்கரையில் கரையொதுங்கி கிடந்துள்ளது. இதுபற்றி தகவலறிந்த கடலோர காவல் குழும காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று சிலிண்டரை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.