நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில் நேற்று காலை முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது. இதனை பார்த்த வடக்குசல்லிக்குளத்தை சேர்ந்த வினோத்குமார்(38) என்பவர் வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர் ரவிக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து 1½ அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலையை கைப்பற்றி தனது அலுவலகத்திற்கு எடுத்து சென்றார்.
இதுகுறித்து ரவி, வேதாரண்யம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து சிலையை நாகப்பட்டினம் அருங்காட்சியத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிலை அங்கு எப்படி வந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.