Categories
தேசிய செய்திகள்

கரௌலி வன்முறைக்கு…. இதுதான் காரணமா?…. எம்.பி அசாதுதின் ஓவைசி குற்றசாட்டு…..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கரௌலி நகரில் சென்ற 2ஆம் தேதி நவ சம்வத்ஸர் விழாவை முன்னிட்டு மத ஊர்வலம் நடந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சில பேர் ஊர்வலத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் காவல்துறை அலுவலர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு கலவரம் வெடித்து பல இடங்களில் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
அதன்பின் கலவரத்தை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஜெய்பூர் வந்த ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசி, கரெளலி வன்முறைக்கு  ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என்று கூறினார். மேலும் சட்டஒழுங்கை பேணிக் காப்பதில் ராஜஸ்தான் அரசானது தோல்வியடைந்ததாகவும், முஸ்லீம் மதத்தினரை குறி வைத்து வன்முறை நடைபெற்றதாகவும் விமர்சித்து உள்ளார்.

Categories

Tech |