நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் போஸ்டருடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.
நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ #கர்ணன் pic.twitter.com/VIgdMyisTv
— Dhanush (@dhanushkraja) April 14, 2021
கர்ணன் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் கர்ணன் படத்தின் அட்டகாசமான போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘நன்றி, கர்ணன்’ என பதிவிட்டுள்ளார் . தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.