தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீஸர் ரிலீஸாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால் கௌரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
Set your alarm clock at 7:01 pm tomorrow #KarnanTeaserArrives @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @thinkmusicindia @ZeeTamil @KarnanTheMovie #KarnanArrivesOnApril9 pic.twitter.com/hRxWrf4XZa
— Kalaippuli S Thanu (@theVcreations) March 22, 2021
மேலும் இந்த படத்தின் டீசர் மார்ச் 23ஆம் தேதி வெளியாகும் என சில தினங்களுக்கு முன் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் கர்ணன் படத்தின் டீஸர் வெளியாகும் நேரத்தை போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை மாலை 7:01 மணிக்கு இந்தப் படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சகத்தில் உள்ளனர்.