Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் ஒரு வாள்… பனியன், லுங்கியில் மாஸான போட்டோவை வெளியிட்ட தனுஷ்… கொண்டாடும் ரசிகர்கள்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனிஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் தனுஷ் வெளியிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் வெளியான ‘பட்டாஸ்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்கில் ஓடி வருகிறது. இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சுருளி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.

தனுஷின் 41-வது படமாக இப்படம் உருவாகி வருகிறது.  ‘கர்ணன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் தனுஷ் மலை உச்சியில் பனியன் மற்றும் லுங்கி கட்டிக் கொண்டு கையில் வாளுடன்  திரும்பி நிற்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனுஷின் ட்வீட்டை ரீசேர் செய்த இயக்குனர் மாரி செல்வராஜ், அவனே அன்பின் கொடை என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒவ்வருவரும் ஒவ்வொரு விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் சம்பவம் தரமானதா இருக்கும் என்று கமெண்ட் செய்து தெறிக்கவிட்டுள்ளார்.

Categories

Tech |