Categories
தேசிய செய்திகள்

“கர்நாடகத்தில் நாளை முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…!!” முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் கல்வி நிலையத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் பெரும் பிரச்சனை வெடித்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் ஹிஜாப், காவித் துண்டு போன்ற எந்த மத அடையாளங்களையும் கல்வி நிலையத்திற்கு அணிந்து வரக்கூடாது என கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த பரபரப்பான சூழ்நிலை காரணமாக கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கலாம் என கடந்த வியாழக்கிழமை கர்நாடக முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் வரும் 14ஆம் தேதி (நாளை) முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட காவல் துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோர் முன்னிலையில் அமைதிக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் அந்த கூட்டத்திற்கு பிறகு உயர்கல்வி மற்றும் கல்லூரிகளை திறப்பது தொடர்பான உத்தரவுகள் வெளியிடப்படும் எனவும் மாநில முதல்வர் கூறியுள்ளார்.

Categories

Tech |