Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில்…. அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் மட்டும் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை போன்று கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இதில் முதல் இரண்டு வகையில் உள்ள மா,வட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மதியம் 2 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசின் வருவாய் துறை முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ” தட்சிண கன்னடா, ஹாசன், தாவணகெரே, சாம்ராஜ்நகர் ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாவட்டங்களில் மளிகை கடைகள் மட்டுமின்றி அனைத்து வகையான கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும், அதே சமயம் குளிர்சாதன வசதியுடன் இயங்கக்கூடிய கடைகள் திறக்க அனுமதி இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |