Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கர்நாடகாவின் தமிழ்ப்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்… எடியூரப்பாவிற்கு முதல்வர் பழனிசாமி கடிதம்…!!!

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திரும்பத் திறக்கக் கோரியும் ,தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரியும்  தமிழக முதலமைச்சர், எடியூரப்பாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகாவில் தங்கியுள்ள தமிழ் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக கர்நாடகாவில் பல தமிழ்வழி கல்வி பள்ளிகள் செயல்பட்டன. ஆனால் தற்போது புதிதாக தமிழ்ப் பள்ளிகள் தொடங்குவதற்கு அனுமதியளிக்கப்படவில்லையெனவும் ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டதாகவும் கர்நாடகாவில் உள்ள ஆசிரியர்கள் சங்கத்திலிருந்து தமிழக முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு  கடிதம் எழுதியுள்ளார். இதில்  கர்நாடகாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ் மக்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. மேலும் கர்நாடகா மாநிலத்தின் அனைத்து தொழில் துறையிலும் தமிழ் மக்கள் பணியாற்றுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.எனவே இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே மூடப்பட்டுள்ள தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டுமெனவும், தமிழ் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும், புதிதாக தமிழ் வழி கல்வி மூலம் பயில்வதற்கான பள்ளிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட வேண்டுமெனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |