Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக 600 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல்”…. கைது செய்த போலீசார்….!!!!

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக கடத்தப்பட்ட 600 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபரை கைது செய்தார்கள்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவ்வழியாக சென்ற மினி லாரியை சோதனை செய்த பொழுது காய்கறி மூட்டைகளுக்கு இடையே வேறு சில மூட்டைகளும் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து பார்த்த பொழுது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததும் கேரளாவுக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்ததை தொடர்ந்து 600 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சாஜர் என்பவரை விசாரணை செய்ததில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாஜரை கைது செய்து லாரியையும் கடத்தல் பொருளுையும் பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |